search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா ஒருநாள் தொடர்"

    இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மூன்றாவதாக 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த மூன்று தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

    அயர்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது பும்ராவின் இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் கடந்த புதன்கிழமை லீட்ஸில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின் இந்தியா திரும்பியுள்ளார்.



    ஒருநாள் போட்டி தொடங்குவதற்குள் பும்ரா காயம் குணமடைய வாய்ப்பில்லை. இதனால் பும்ராவிற்குப் பதிலாக மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பும்ரா பிசிசிஐ-யின் மெடிக்கல் குழுவின் மேற்பார்வையில் குணமடைவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். அவரது காயம் குணமடைவதற்கான கால அவகாசம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    ×